உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பச்சிளங் குழந்தையை காப்பாற்றி நிஜ கதாநாயகியான பெண்!!(படங்கள்)

272

அமெரிக்காவில் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை இளம் பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரை சேர்ந்த பெண் பமீலா.

இவர் நேற்று பிறந்து 5 மாதங்களேயான தனது சகோதரின் குழந்தையான செபாஸ்டியனை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். செபாஸ்டியன் பிறந்தது முதலே சுவாசப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளான்.

காரில் ஏறியது முதலே தொடர்ந்து அழுது கொண்டிருந்த குழந்தை, திடீரென அழுவதை நிறுத்தியுள்ளது. என்னவென்று பார்த்த போது தான் குழந்தை செபாஸ்டியன் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளதும், குழந்தையின் உடல் நீலநிறத்தில் மாறத்தொடங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் என்னசெய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த பமீலாவுக்கு அருகில் இருந்த பொலிசார் உதவிபுரிய முன்வந்துள்ளனர். உடனடியாக அவசர மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடு விட்டது.

அதற்குள் குழந்தையின் நிலைமை மிகவும் மோசமடைவதை கண்ட பமீலா, CPR எனப்படும் முதலுதவி சிகிச்சையை அளித்துள்ளார். (CPR என்பது சுயநினைவு அற்ற சுவாசம் இல்லாத ஒருவருக்கு வழங்கப்படும் சுவாசம். இதயத்துடிப்பு நின்றுவிட்ட ஒருவருக்கு உடனடியாக மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் அழுத்திப் பிசைந்து, வாயின் மேல் வாய் வைத்துச் சுவாசத்தை அளிப்பது)

தற்போது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

H1 H2 H3 H4 H5