கொரோனா வைரஸ் சிறார்களுக்கு பெரிய பாதிப்பை எற்படுத்தாது!!

625

கொரோனா..

கொரோனா வைரஸ் சிறார்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு பிறக்கும் போதே பீ.சீ.ஜீ ஊசி மருந்து வழங்கப்படுவது, ஆறு மாதங்கள் வரை தாய்பால் வழங்கப்படுவது, இன்புளுவன்சா, டெங்கு நோய்களுக்கான சிகிச்சைகள், சுகாதார பாதுகாப்பு உணவுகள் வழங்கப்படுவதன் மூலம் குழந்தைகளில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது கொரோனா வைரஸ் சிறார்களின் உடலில் தாக்குப்பிடிக்க முடியாமைக்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளின் போது கொரோனா வைரஸ் தொற்றிய ஒரு சில சிறார்கள் மாத்திரமே கண்டறியப்பட்டதாக மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.