வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்னால் டெங்கு பரவும் அபாயம்!!

729

டெங்கு பரவும் அபாயம்..

வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள கழிவு வாய்க்காலில் கழிவு நீர் வழிந்தோடாது தேங்கி நிற்பதுடன், குறித்த கழிவு வாய்க்காலில் வெற்றுப் போத்தல்கள், பொலித்தீன் பைகள் என்பனவும் நீண்ட நாட்களாக அகற்றப்படாது பரவலாக காணப்படுகின்றது.

இதன் காரணமாக அப்பகுதியில் நுளம்புகளின் பெருக்கம் அதிகமாகவுள்ளதாகவும், டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

போக்குவரத்து பயணிகள், பேரூந்து சாரதி, நடத்துனர்கள், முச்சக்கர வண்டி ஒட்டுனர்கள், பொலிசார் என தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடத்தில் இவ்வாறு காணப்படுகின்றமை குறித்து பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பதில் கிடைக்கவில்லை.