வவுனியாவில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு!!

1961

மோட்டார் சைக்கிள் திருட்டு..

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டுப் போயுள்ளது.

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமகா வகையைச் சேர்ந்த FZ ரக NP-BGJ-9562 இலக்க மோட்டார் சைக்கிளே நேற்று(20.10.2020) இரவு இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிதம்பபுரம் பொலிசில் உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.