வவுனியா புளியங்குளம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் யானைகள் அட்டகாசம்!!

1322

யானைகள் அட்டகாசம்..

வவுனியா புளியங்குளம் சின்னப்பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் நேற்று (20.10.2020) இரவு யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

பாடசாலை வளாகத்தினுள் புகுந்த யானைகள் பயன்தரு மரங்களான வாழைமரம், தென்னை மரங்களுக்கு சேதம் விளைவித்ததுடன் சிறுவர் விளையாட்டு மைதானத்தின் வேலிக்கும் சேதம் விளைவித்துள்ளது.

யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எப்போது அப்பகுதியில் யானைகளுக்கு வேலி அமைக்கப்படும்? என்ற கேள்விக்குறியுடன் பாடசாலை சமூகத்தினர்.