20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!!

644


20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம்..



20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன.



அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.




19ஆவது அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி 20ஆவது அரசியலமைப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கொண்டு வரப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் நாட்டுக்கு பொருத்தமற்றது என சமகால அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.