களவாடப்பட்ட 500 தாள்கள் போலியானவையாக கருதப்படும் : பொலிஸார்!!

903

500கொழும்பின் புறநகர் பியகமவில் அமைந்துள்ள இலங்கையின் நாணயத்தாள்கள் முதன்முறையாக அச்சிடும் நிலையத்தில் இருந்து 500 ரூபா தாள்கள் களவாடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 530, 500 ரூபா தாள்கள் என்ற 265ஆயிரம் ரூபாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணைகளில் இருந்து குறித்த நபர் இதுவரை சுமார் 900,000 ரூபா பெறுமதியான 500 ரூபா தாள்களை பொதுமக்கள் மத்தியில் விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் களவாடப்பட்ட 500 ரூபா தாள்களை போலியாக கருதி அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

O25 524376 என்ற இலக்கங்களை கொண்ட 500 ரூபா தாள்களையே பயன்படுத்த வேண்டாம் என்று பொலிஸார் கோரியுள்ளனர்.