பரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற அரச உயர் அதிகாரியான பெண் மரணம்!!

1970

நதீ ஜயவிக்ரம…

மாத்தறை மாவட்ட உதவி செயலாளர் நதீ ஜயவிக்ரம இன்று வைத்தியசாலையில் உ யிரிழந்துள்ளார். கர்ப்பிணியான அவர் இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இரத்த பரிசோதனையின் போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1985ஆம் ஆண்டு பிறந்த அவர் உயிரிழக்கும் போது 35 வயதாகும்.

சடலம் தொடர்பான பிரே பரிசோதனை மாத்தறை வைத்தியசாலையில் சட்ட வைத்தியரினால் மேற்கொள்ளப்படவுள்ளது. 2012ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் நுழைந்த அவர் விளையாட்டுத் துறை அமைச்சில் முதல் நியமனம் பெற்றுள்ளார்.

2013ஆம் ஆண்டு வெலிப்பிட்டிய உதவி பிரதேச செயலாளராகவும், 2016ஆம் ஆண்டு திஹகொட உதவி பிரதேச செயலாளராகவும், 2017ஆம் ஆண்டு முதல் உயிரிழக்கும் வரை மாத்தறை மாவட்ட செயலாளராக செயற்பட்டுள்ளார்.