வவுனியாவில் 69 பேருக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நியமனம் வழங்கி வைப்பு!!

2355

69 பேருக்கு..

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 69 பேருக்கான நியமனங்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.கே.மஸ்தான் வழங்கி வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தலைமையில் பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட பிரதான அலுவலகத்தில் இன்று(24.10.2020) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் பெறுவதற்கு முதல்கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பயிலுனர் நியமனக் கடிதங்களை முதல் கட்டத்தில் பெறுவதற்கு வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் சிபார்சுக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 69 பேருக்கே இவ்வாறு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்டர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்கள் வழங்கப்படுவதுடன், பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்கள் வெவ்வேறு திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்பட்டவுள்ளனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் வவுனியா நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் மகேந்திரன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், மதத்தலைவர்கள் எனப் பலரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.