பாடசாலை சிறுமிகள் 9 பேர் மீது துஸ்பிரயோகம் : ஆசிரியருக்கு விளக்கமறியல்!!

578

Jailஅநுராதபுரம் – கஹடகஸ்திகிலிய பிரதேச பாடசாலையில் பயிலும் 9 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கஹடகஸ்திகிலிய பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அநுராதபுரம் நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் அந்த பாடசாலையின் உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.