வவுனியாவில் பிரபல உணவகத்திற்கு பூட்டு : நான்காக அதிகரித்த வர்த்தக நிலையங்கள்!!

2723


உணவகத்திற்கு பூட்டு..


வவுனியாவில் கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய இன்று (25.10) மதியம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.வவுனியா வடக்கு பகுதியில் தனியார் நிறுவனத்தில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக கருதப்படும் வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் , பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையம், ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் என மூன்று வர்த்தக நிலையங்கள் கடந்த 21ம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.


வவுனியா வடக்கு பகுதியில் தனியார் நிறுவனத்தில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.


தற்போது வவுனியா வடக்கில் தொற்றாளர் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்தன் காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சென்றதாக கருதப்படும் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமும் இன்று (25.10) மதியம் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாக மூடப்பட்டது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் அவர்கள் வந்து சென்ற வர்த்தக நிலையங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.