அடிக்கடி நோயால் அவதிப்பட்ட குடும்பத்தார் : சாமியாரிடம் சென்றவர்களுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

841


தமிழகத்தில்..


தமிழகத்தில் நோயால் அவதிப்பட்ட குடும்பத்தினருக்கு பில்லி சூனியம் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சாமியாரின் செயல் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசியை சேர்ந்தவர் ராஜகுமாரன். இவர் சொந்தமாக லோடு வேன் ஒன்றை வைத்து ஓட்டி வந்தார். கடந்த சில தினங்களுக்கு சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த சாமியார் ஒருவரை பார்த்து அவரிடம் தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அடிக்கடி ஏதாவது உடல் நிலை சரியில்லாமல் அவதிப்படுவதாக கூறி ராஜகுமாரன் குறிகேட்டுள்ளார்.


அதற்கு அந்த சாமியார் உங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும், உடனடியாக அதனை எடுக்க பூஜை நடத்த வேண்டும் என்று கூறியதோடு, இந்த பூஜைக்கு 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 சேவல் கோழிகளை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வருமாறும் கூறியுள்ளார்.


நோயை குணப்படுத்த மருத்துவரை நாடாமல் சாமியாரின் பேச்சை உண்மை என்று நம்பிய ராஜகுமாரன் தனது மினிவேனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, தனது உறவினர் லாசர் என்பவருடன் புளியங்குடியில் இருந்து காரில் சென்னை வந்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே அந்த சாமியாரை பார்த்து 2 லட்சம் ரூபாய் பணத்தையும், 2 கோழிகளையும் கொடுத்துள்ளார். உடனடியாக அதை பெற்று கொண்ட சாமியார் பூஜை பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவேயில்லை.

அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த ராஜகுமாரன் இது குறித்து பொலிசில் புகாரளித்தார். இதையடுத்து மோ சடி செய்த போலி சாமியார் யுவராஜ் இருக்குமிடத்தை கண்டுபிடித்த பொலிசார் அவனை தேடி சென்ற நிலையில் உஷாரான் யுவராஜ் காரில் தப்பிசென்றுவிட்டான்.

அவனது காதலி ஜெயந்தி, காசிமேடு பாப்பா, அரக்கோணம் சுரேஷ், மதுரை அமர்நாத், ஆகியோரை சுற்றி வளைத்து பொலிசார் கைது செய்தனர். மேலும் பொலிசார் த ப் பி ஓ டி த லைமறைவான யுவராஜை வ லைவீ சி தே டிவருகின்றனர்.