அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிரடிப் படையினருக்கு கொரோனா தொற்று!!

342


கொரோனா…


பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரபு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விசேட அதிரடிப்படை முகாம்கள் மூன்று தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விசேட அதிரடிப்படை முகாமில் 11 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமையினால், களனி, களுபோவில, ராஜகிரிய ஆகிய மூன்று முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. முகாமிற்கு மீன் வாங்குவதற்காக பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற போது இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.


இதேவேளை, மிரிஹான, சீதுவ மற்றும் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொலிஸ் அதிகாரிகள் 345 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.