முல்லைத்தீவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் : விபத்தில் இளைஞரொருவர் பலி!!

1193


முல்லைத்தீவில்..


முல்லைத்தீவு – முள்ளியவளை, ஆலடி பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த 21 வயதுடைய மகேந்திரன் கவிஞ்ஞன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளினை செலுத்தி சென்ற போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைனகளை முன்னெடுத்துள்ளனர்.