ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம் : PCR பரிசோதனை!!

1962

20 வயதான இளைஞன்..

வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையினுள் பணியாற்றிய ஊழியர் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த ருமேஷ் பெர்னாண்டோ என்ற 20 வயதுடைய இளைஞன் ஆகும்.

அவரது உடலின் மாதிரிகள் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக மாரவில நீதிமன்றத்தின் வைத்திய அதிகாரி ருவன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியில் இருந்து வென்னப்புவ ஹோட்டலில் பணிக்காக சென்றுள்ளார். அவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதற்கான பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மர்மமான இந்த மரணம் தொடர்பில் வென்னப்புவ தலைமையத்தின் பிரதான பொலிஸ் அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.