மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்!!

1017

ஊரடங்கு சட்டம்..

நாளை (29) நள்ளிரவு முதல் மேல் மாகாண முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் அறிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அந்த பிரதேசங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளவிய ரீதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் கண்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.