மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவர் கைது!!

723

Arrestவழிப்போக்கர்கள் உள்ளிட்ட பிற நபர்களுடன் உடலுறவு கொள்ளுமாறு சொந்த மனைவியை சித்திரவதை செய்து வந்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி வேறும் நபர்களுடன் இணைந்திருப்பதனை பார்த்து ரசிக்கும் மிக கொடூரமான பாலியல் இச்சை கொண்டவராக கைது செய்யப்பட்ட நபர் கருதப்படுகின்றார்.

கணவர் கடுமையாக தாக்கி தம்மை துன்புறுத்திய காரணத்தினால் அவரது கட்டளைகளை நிறைவேற்றி வந்த்தாக மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வழிப்போக்கர்களுடன் தாம் உறவு கொள்வதனை கணவர் பார்த்து ரசித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கணவரின் தாக்குதல்கள் காரணமாக பல தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தித் தாள்களில் காணப்படும் தொலைபேசி இலக்கங்களைக் கொண்டு நபர்களைத் தொடர்பு கொண்டு மனைவியுடன் உறவு கொள்ளுமாறு அவர்களுக்கு இந்த நபர் அழைப்பு விடுத்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 26ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சந்தேக நபரை மனநல மருத்துவரிடம் பரிசோதித்து, அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.