லண்டனில் வீட்டை இழந்து தெருவுக்கு வந்த இளம் தம்பதி : அவர்களுக்கு நடந்தது என்ன?

7010

லண்டனில் வசிக்கும் இந்திய தம்பதி வசித்த வீடு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததில் அவர்கள் கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்தவர் ஜஸ்பிர் கவுர் (30). இளம்பெண்ணான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தார்.

அங்கு சுக்தேவ் சிங் என்ற இந்தியரை சந்தித்த நிலையில் இருவரும் லண்டனில் திருமணம் செய்து கொண்டனர்.

ஜஸ்பிர் மற்றும் சுக்தேவ் இருவரும் சுற்றுலா விசாவில் பிரித்தானியா வந்த நிலையில் ச ட்டவி ரோதமாகவே அங்கு தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் தம்பதி தங்கள் 7 மாத குழந்தையுடன் ஒரு அடுக்குமாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். அந்த வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் மொத்த கட்டிடமும் தீயில் கருகியது.

ஆனால் மூவரும் அதிர்ஷடவசமாக உ யி ர் த ப்பினர், தற்போது வீடு இல்லாமல் கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.

தற்காலிகமாக அவர்கள் Brentford-ல் உள்ள நண்பர் வீட்டில் தங்கியுள்ள போதிலும், சிறிது காலமே அவர்களால் அங்கு தங்க முடியும் என தெரியவந்துள்ளது.

தம்பதி கூறுகையில், இந்தியாவில் வசிக்கும் எங்கள் குடும்பத்தார் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர். பிழைப்பு தேடியே இங்கு வந்தோம் என கூறினர்.

இதனிடையில் தம்பதி வசித்து வந்த வீட்டில் இருந்து இரண்டு ச டலங்கள் கைப் பற்றப்பட் டுள்ளது.

மேலும் ஒரு நபர் கா ணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது, கேஸ் வெ டிப்பால் இந்த தீவிபத்து நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் தான் இருவரும் உ யிரிழந்து ள்ளனர் என தெரியவந்துள்ளது.