அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாபிரிக்கா அபார வெற்றி!!

511

SAஅவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 231 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதில் அம்லா 127 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்து வீச்சில் ஜோன்சன், சிடில் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளைப் பெற்றனர்.

448 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 216 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஜர்ஸ் 107 ஓட்டங்களையும், வோனர் 66 ஓட்டங்களையும் அதிகப்படியாக பெற்றனர். ஏனைய வீரர்கள் இரட்டை இலக்க ஓட்டத்தைக்கூட பெறமுடியாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க பந்து வீச்சில் ஸ்டெயின் மிகவும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கட்டுகளைச் சாய்த்துள்ளார்.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக தென்னாபிரிக்க வீரர் டுமினி தெரிவு செய்யப்பட்டார். மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.