இலங்கையில் சமூக பரவல் நிலைமையில் கொரோனா : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

279


கொரோனா..


கொரோனா வைரஸ் பரவல் தற்போது சமூக பரவல் நிலைமையில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.இந்த நிலைமை குறித்து அறிவிக்க வேண்டியது தமது சங்கம் அல்ல எனவும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவே இதனை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


இணையத்தள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலைமையில் நாடு மிகவும் பாரதூரமான ஆபத்தில் உள்ளது. மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கலாம்.


நாட்டில் வாழும் மூத்த பரம்பரையினருக்கு பெரிய ஆபத்து. இலங்கை தற்போது இத்தாலி எதிர்நோக்கிய நெருக்கடியான நிலைமைக்கு அருகில் உள்ளது. தொற்று நோய் அல்லாத நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.