கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் : தகாத வார்த்தைகளால் திட்டிய நபர்!!

1246

இளம் பெண்..

கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது அந்த பெண்ணுக்கு ஊ கூச்சலிட்டு தகாத வார்த்தையால் திட்டி குழப்பம் ஏற்படுத்திய நபர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று இரவு அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அம்பியுலன்ஸ் வந்த சந்தர்ப்பத்தில், அயலவர் ஒருவர் “அவர் பெண் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் ஊ கூச்சலிட்டுள்ளார்.

இந்த நபர் இலங்கையின் சமாதான நீதவான்களில் ஒருவராகும் என குறிப்பிடப்படுகின்றது. இளம் பெண்ணை அழைத்து செல்ல வந்த ஏனைய அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தொற்றாளர்களை அவமதிக்க வேண்டாம். உயர் பதவியில் இருந்துக் கொண்டு இவ்வாறு செயற்படுவதென்பது அருவருக்கதக்க ஒரு விடயமாகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.