பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியான விசேட அறிவித்தல்!!

2055


விசேட அறிவித்தல்..


பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக 9ம் திகதி ஆரம்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக ஆரம்பித்தல் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகின்றது. பாடசாலை விடுமுறை இரண்டு வாரங்களுக்கு மேலும் நீடிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.