மினுவாங்கொட கொத்தணியை கட்டுப்படுத்த இரண்டு மாதங்கள் ஆகும்!!

568

மினுவாங்கொட கொத்தணி..

மினுவாங்கொட கொரோனா கொத்தணியை முழுமையாகக் கட்டுப்படுத்த இரண்டு மாதங்கள் செல்லலாம் என, பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “மினுவாங்கொட பிரெண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு, இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்றது.

தற்போது இந்த கொத்தணி ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 30 நாள்களுக்குள் இந்த கொத்தணியிலிருந்து 7,856 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,744 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 332 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 5,581 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர். 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.