இலங்கையில் தீவிரமாக பரவும் கொரோனா : கட்டுப்படுத்த வழிகள் இல்லை : சுகாதார அமைச்சு!!

775

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மேலும் பரவுவதற்கான ஆபத்து உள்ளமையினால் இன்னும் இரண்டு வருடங்கள் அதனுடன் வாழ வேண்டும் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 400 முதல் 500 வரையிலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அது மிகவும் மோசமான நிலைமையாகும்.

இதுவரையில் 65 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் PCR பரிசோதனைக்கமைய எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமையில் கொரோனா தொற்றினை நாங்கள் உரிய முறையில் கட்டுப்படுத்தியுள்ளதாக கூற முடியாது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவதை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டல்களை பின்பற்ற வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு வேறு வழியே இல்லை என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.