நிலைமை சிறப்பாக உள்ளது : ஊரடங்குச் சட்டத்தை நீக்க முடியும் : இராணுவ தளபதி!!

649

இராணுவ தளபதி..

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் சிறப்பாக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தேசிய செயற்பட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட் கிழமை நீக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இந்த காலப்பகுதிக்குள் மேல் மாகாணத்தில் உள்ள சகல கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் கவனமாக இருந்தால், இந்த பிரச்சினை தீர்க்க முடியும். இதனால், சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

அப்படி செயற்பட்டால், இந்த பிரச்சினையை விரைவாக தீர்க்க முடியும். தற்போது நிலைமை சிறப்பாக உள்ளது. முழு நாட்டையும் முடக்க வேண்டிய அவசியமில்லை.

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்ட விதம் தொடர்பான சில தகவல்கள் கிடைத்துள்ளன. அடுத்த வாரமளவில் இது குறித்த சரியான தகவல்களை வெளியிட முடியும் என நம்புவதாகவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.