Hand sanitizer பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

2030

எச்சரிக்கை..

இலங்கையின் பல பகுதிகளில் தரமற்ற Hand sanitizer விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுய்ளது. இது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான தரமற்ற Hand sanitizer பயன்பாடு காரணமாக பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக சங்கத்தின் பிரதான செயாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார். இதனால் அவதானமாக இருக்குமாறு அவர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முகக் கவசம் பயன்படுத்தும் போது தரமான முகக் கவசங்களை பயன்படுத்துமாறு அவர் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.