கைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது!!

564

கைத்தொலைபேசி..

கைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றையதினம் அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் உள்ள கடை ஒன்றில் தொடர்ச்சியாக 20க்கும் அதிகமான விலையுயர்ந்த கைத்தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக உரிமையாளரினால் சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டிற்கு அமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி அம்பாறை கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்னவின் ஆலோசனையினூடாக,

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா, உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் தலைமையில் சென்ற குழுவினர் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

குறித்த கைத்தொலைபேசி விற்பனை செய்யும் கடையில் பணியாற்றிய இருவர் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட விலையுயர்ந்த கைத்தொலைபேசிகளை தொடர்ச்சியாகக் களவாடி விற்பனை செய்து வந்துள்ளமையை தொடர்ந்து கடை உரிமையாளர் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமரா காணொளியினை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அக்கடையில் பணியாற்றிய இரு சந்தேகநபர்களைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது களவாடப்பட்ட கைத்தொலைபேசிகளை சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பகுதியில் வாங்கி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான இருவரையும் கொண்டு முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையின் போது பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இவ்வாறு கைதான 8 சந்தேகநபர்களது தகவலின்படி களவாடப்பட்ட 20 கைத்தொலைபேசிகளில் காரைதீவு பகுதியிலிருந்து 8 கைத்தொலைபேசிகளும், சாய்ந்தமருதில் இருந்து 10 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட 8 சந்தேகநபர்களும்ளையும் நாளைய தினம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.