இலங்கையில் திடீரென கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தமை ஏன்? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!

554

கொரோனா..

இலங்கையில் நோய் அறிகுறிகள் ஏற்படாத கொரோனா தொற்றாளர்களினாலேயே வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் பெரும்பாலானோர் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் அற்றவர்கள் ஊடாகவே கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறான அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக வைத்தியசாலைகள் அல்லாத இடை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தற்போது வைத்தியசாலை அவசியமில்லை. அவர்கள் ஊடாக கொரோனா தொற்று ஏனையவர்களுக்கு பரவாத வகையில் தடுப்பதே தற்போது அவசியமான விடயமாகியுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் தகன நடவடிக்கை, அவர்களின் மரண பரிசோதனை நடவடிக்கை எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.