உயிரிழப்புகளை சந்தித்துத்தான் கொரோனாவை விரட்ட முடியும் : இராணுவத் தளபதி விளக்கம்!!

676


இராணுவத் தளபதி..



“நாட்டின் தற்போதைய நிலைமையில் உயிரிழப்புகளையும் சந்தித்துத்தான் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.” இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை எமக்கு பெரும் சவாலாக உள்ளது. எனினும், இதை எம்மால் விரைவில் கட்டுப்படுத்த முடியும்.




இதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால், இதன்போது உயிரிழப்புகளையும் நாம் சந்திக்க வேண்டி வரும். அதாவது பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவர்கள் தொற்றின் தாக்கத்தால் வீட்டிலேயே இறக்கின்றார்கள். இது தவிர்க்க முடியாத நிலைமை.


கொரோனாவால் நாட்டின் பல இடங்களில் முடக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இந்த முடக்கல் நிரந்தரம் இல்லை. படிப்படியாக முடக்கலைத் தளர்த்துவோம்.

முழு நாட்டையும் முடக்கல் நிலையில் வைத்திருக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. எத்தனையோ மக்கள் நாளாந்த வாழ்வாதாரத்தை நம்பியே வாழ்கின்றார்கள்” – என்றார்.

-தமிழ்வின்-