கொரோனா ஏற்படுத்திய நெருக்கடி : கடனாளியாக மாறிய இலங்கையர்கள்!!

406


கடனாளியாக மாறிய இலங்கையர்கள்..


வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நகை அடங்கு பிடிக்கும் நிலையங்களில் நாட்டு மக்கள் 643 பில்லியன் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.இந்த வருடத்தின் கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் இந்த கடன் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.


நகை கடனுக்காக வழங்கப்படும் பணம் அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வர்த்தக வங்கிகளில் ஒரு பவுண் நகைக்கு 57000 – 60000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.


இதனை ஒப்பிடும் போது தங்க கடனுக்காக வருடாந்த வட்டி வீதம் 10 வீதம் வரை மத்திய வங்கியினால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில தனியார் நிதி நிறுவனங்களில் தங்கம் ஒரு பவுணுக்கு 65000 ரூபாய் வரை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையின் அனைத்து கடன் அட்டை பயனாளர்கள் நால்வரில் ஒருவர் இதுவரையில் கடனை மீள செலுத்த முடியாத நிலைக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

41 வீதமான கடன் அட்டை பயனாளர்கள் கடன்ன பணத்தை திருப்பி செலுத்தவில்வை என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.