5000 ரூபா பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த பெண் கீழே விழுந்து மரணம்!!

535


வரிசையில் காத்திருந்த பெண்..


கொரோனா நிவாரண கொடுப்பனவாக வழங்கப்படும் 5000 ரூபாவினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் கீழே விழுந்து மரணித்துள்ளார்.நீர்கொழும்பு கட்டான கதிரான கிராம சேவகர் காரியாலயத்திற்கு எதிரில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வடக்கு கதிரான பகுதியைச் சேர்ந்த உடுகம கோரலாகே சோமாவதி என்ற 60 வயதான பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


கொரோனா பீதி காரணமாக, கீழே விழுந்த பெண்ணுக்கு எவரும் உதவ முன்வரவில்லை எனவும் பின்னர் அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் பெண்ணை வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பெண்ணின் மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட உள்ளது.