கொரோனா காலமும் கிரக மாற்றமும் : ஒரு இளைஞனின் எண்ணத்திலிருந்து!!

250


நாளாந்த பத்திரிகைகளை நாள் தோறும் புரட்டும் வேலையினையே கிரமமாக செய்து வருகிறேன். நாட்டு நிலமையையும் வீட்டு நிலமையையும் கருத்திற்கொண்டே நான் மைதானத்திற்கு வருகை தருவதில்லை என்பதை ஒருவரேனும் புரியாமல் இருக்கமாட்டார்கள் என நம்புகின்றேன்.


அதுமட்டுமல்லாது, புதினப் பத்திரிகைகளை புரட்டும் போது வருகின்ற புதினங்கள் வீட்டுக்குள் அடங்கி இருப்பதன் அவசியத்தை வீட்டுக்காரருக்கும் சொல்லிவிடுகின்றது.
ஆனால் நிச்சயமாகவே நிலமை வழமைக்கு பழமை போல் திரும்பும் என நம்புகிறேன். அதற்காகவே காத்திருக்கிறேன்.

எனது சக வீரர்கள் விளையாடுவதை என்னால் ஊக்கப்படுத்த முடியவில்லை. மாறாக, தடுக்கவே சொல்கின்றது. ஆனாலும் அதற்கும் தடுமாற்றமாகவே இருக்கின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் சாதாரண பொது மகனாக நீங்கள் விளையாடுவதை என்னால் அனுமதிக்கவே முடியவில்லை. (மனதுக்குள் திட்டினாலும் மன்னித்திடுங்கோ தம்பி மார், அண்ணா மார்)நீங்கள் விளையாடுவதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் முதலாவதாக முந்திக்கொண்டு முழுவதுமாக வீட்டிலிருந்து பார்ப்பது நானாக இருக்கும்.

கிரக மாற்றமேற்பட்டு மீண்டும் விளையாடுகின்ற சூழல் உருவானால் உங்களுடன் மைதானத்தில் இணைந்து கொள்வேன். அது வரை Viber இல் தொடர்ந்து இணைந்திருப்பேன்.


கொரோனா என்னும் கொடிய நோயை விரட்டியடிக்க இளைஞர்களாக எழுவோம்.

#சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்றுவோம்.
#கைகளை கழுவுவோம்.
#முகக்கவசத்தை முகங்கோணாது அணிவோம்.
#வீட்டிலிருப்போம்.


அரசாங்கத்தால் அவ்வவ்போது வழங்கப்படுகின்ற சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவோம்.

-தினேஸ்-