பாடசாலைகள் திறக்கப்படும் திகதி : கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

1348

பாடசாலைகள்..

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23ம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் இதனை தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில், 9ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 3 வாரங்களுக்கு இணையம் மூலமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் படி, கொவிட் 19 கொரோனா தொற்று சூழ்நிலை யைக் கருத்திற்கொண்டு இணையம், வானொலி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் 15 முதல் ஆரம்பமாகும்.

இது தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடுதழுவிய ரீதியில் உள்ள 170 தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர் நியமனம் விரைவாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் தெரிவித்தார்.

-தமிழ்வின்-