இலங்கையில் வீட்டில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளால் ஆபத்து என எச்சரிக்கை!!

667

கொரோனா..

கொரோனா தொற்று ஆரம்பத்தை கண்டுபிடிக்க முடியாத பலர் சமூகத்திற்குள் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்படுகின்றனர். உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்படுவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியதென்பது கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளதென சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக இதுவரையில் அடையாளம் காண முடியாமல் நோயாளிகள் பலர் தொடர்ந்தும் வீட்டில் உள்ளமை உறுதியாகியுள்ளது.

கொரோனா இதுவரையில் சமூகமயமாகியுள்ளதா இல்லையா என்பது தற்போது விவாத பொருளாகியுள்ளது. எனினும் சமூக மயமாகவில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.