ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் சிறை : உகாண்டாவில் புதிய சட்டம்!!

843

oorinaகிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் கொடும் குற்றமாக கருதப்படுகிறது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பையடுத்து அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்திற்கு கடந்த ஆண்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

முதல் முறை பிடிபடும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், மீண்டும் பிடிபட்டால் ஆயுள் முழுவதும் அவர்களை சிறையில் அடைத்து வைக்கவும் இந்த புதிய சட்டம் வழிவகை செய்தது. உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து நேற்று கையொப்பமிட்டார்.

இந்த சட்டத்தின் கீழ் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ஓரினச்சேர்க்கை ஜோடிகள் உகாண்டாவை விட்டு வெளியேறி விட்டனர்.

ரஷ்யா, நைஜீரியா போன்ற சில நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.