வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் சுகாதாரப் பிரிவினர் அதிரடி சோதனை : எச்சரிக்கையும் விடுப்பு!!

800


சுகாதாரப் பிரிவினர் சோதனை..



கொவிட் 19 இன் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியேழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட சுகாதார பிரிவினர் வியாபாரத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் கைகழுவதுக்குரிய அனைத்து வசதிகள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி, வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களின் சுகாதார நடைமுறை,




வர்த்தக நிலையத்தின் காசாளர் பிரிவு பொலித்தீன் மூலம் அடைக்கப்பட்டுள்ளதா என்பற்றினை ஆராய்ந்திருந்ததுடன் அதனை மீறி செயற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களின் விபரங்களையும் திரட்டினர்.


அத்துடன் வீதியில் சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, முகக்கவசமின்றி பயணித்த பொதுமக்களுக்கு சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களின் பெயர் விபரங்களையும் சேகரித்ததுடன்,

சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளில் சாரதி – பயணி ஆசனத்திற்கிடையே பொலித்தீன் மூலம் அடைக்கப்பட்டுள்ளதா என்பவற்றினையும் பார்வையிட்டதுடன் அதனை மீறியிருந்த சாரதிகளின் பெயர் விபரங்களையும் திரட்டியிருந்தனர்.


குறிப்பாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றினையும் சுகாதார பிரிவினர் பார்வையிட்டிருந்தனர்.

இவ் திடீர் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான சிவரஞ்சன் , வாகீசன் , சப்னீன் ஆகியோர் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.