ஆசிய கிண்ண முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

597

SL

ஆசிய கிண்ண கிரிக்கெட் முதலாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 12 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமான்ன 102 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 67 ஓட்டங்களையும் மத்திவ்ஸ் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் உமர் குல் 2 விக்கெட்களையும் சைட் அப்ரிடி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் சார்பில் உமர் அக்மல் 74 ஓட்டங்களையும் மிஸ்பா உல் அக் 73 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் லசித் மலிங்க அபாரமாக செயற்பட்டு 9.5 ஓவர்கள் பந்துவீசி 52 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக லசித் மலிங்க தெரிவுசெய்யப்பட்டார்.