பலத்த மழையால் ஏற்படக்கூடிய இயற்கை ஆபத்துகள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

788

பலத்த மழை..

இலங்கையில் பெய்யும் பலத்த மழைகாரணமாக இன்று காலை முதல் எதிர்வரும் 24 மணிநேரத்தில் இயற்கை ஆபத்துகள் பல ஏற்படக்கூடுமென ஆரம்ப எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு அருகிலுள்ள குறைந்த அளவிலான வளிமண்டல தாழமுக்கம் காரணமாக நிலவும் மழையுடனான நிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வட மத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவாவில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதன் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான அளவில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.