திருகோணமலையில் ஆயுதங்கள் மீட்பு!!

1001

weaponsதிருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை முருகாபுரியின் மூன்றாம் மைல்கல் பகுதியில் இருந்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ரி-56 ரக துப்பாக்கிகள் 05, ஒரு இயந்திர துப்பாக்கி, மகசீன்கள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.