வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அறுவர் சித்தி!

1663

2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில்  தோற்றிய மாணவர்களில் ஆறு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு (160) மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

அத்தோடு அதிகமான மாணவர்கள் வெட்டுப் புள்ளியை அண்மித்த அடைவு மட்டத்தைப் பெற்றுள்ளனர். அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.