
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவம் நேற்று 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு ஆலய தர்மகர்த்தா சபையினர், தொண்டர்கள் ஆலயத்தில் தகுந்த பாதுகாப்புடனான சுகாதார நடைமுறைகளை மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைத்து உற்சவம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










