பேலியகொடயில் இருந்து வீட்டுக்கு சென்ற நபர் திடீரென விழுந்து மரணம்!!

913

மரணம்…

பேலியகொட பிரதேசத்தில் இருந்து கஹவத்தை சென்ற நபர் வீட்டு வாசலில் விழுந்து உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் வலயத்திலிருந்து வந்தமையினால் கொரோனா தொற்றியள்ளதா என பரிசோதிப்பதற்காக சடலம் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்த நபர் சென்ற வந்த இடங்கள் மற்றும் சந்தித்த நபர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெல்மடுல்ல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

முடிவுகள் கிடைத்த பின்னர் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.