நைஜீரிய அதிகாரிகளை முகாமில் வைத்து பூட்டிய இலங்கை தமிழர்கள்!!

659

Nigerianதிருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள் குழுவொன்று அங்கு சென்ற மூன்று நைஜீரிய அதிகாரிகள் வெளியில் செல்ல முடியாதபடி நுழைவு கதவை உட்பக்கமாக பூட்டியதாக தெரிய வருகிறது.

முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 நைஜீரிய பிரஜைகளின் தடுப்பு காவல் காலம் முடிந்து அவர்களை திருப்பி அனுப்புவதற்கான குடிவரவு நடைமுறைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த அதிகாரிகள் முகாமுக்கு சென்றிருந்தனர்.

இலங்கை தமிழர்கள் தம்முடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாற்று திறனாளியான ஒரு சகாவுக்கு சிறப்பு வசதிகள் மற்றும் மேற்கத்தேய கழிவறை வசதிகளை செய்து கொடுக்குமாறு கோரி வந்தனர்.

நைஜீரிய அதிகாரிகள் தடுப்பு காவலில் இருந்த தமது நாட்டை சேர்ந்தவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்தே இலங்கை தமிழர்கள் நுழைவு கதவை பூட்டியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், தடுப்பு காவலில் இருந்த நைஜீரியர்களின் உதவியுடன் கல்லை கொண்டு பூட்டை உடைத்து நைஜீரிய அதிகாரிகள் வெளியில் வந்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் தொடர்பில் தமது அதிருப்தியை தெரிவித்துள்ள நைஜீரிய பிரஜைகள், வட்ட ஆட்சியாளரும் பொலிஸ் அதிகாரிகளும் இந்த பிரச்சினை தொடர்பில் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.