ஐ போன் வாங்கும் மோகத்தால் கிட்னியை இழந்த இளைஞன்!!

486


ஐ போன்..


ஐ போன் வாங்கும் ஆசையில் சீன இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று தற்போது மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த வாங் ஷாங்கன் (25) வயது இளைஞருக்கு ஐ ஃபோன் வாங்க வேண்டும் என்பது அவருக்கு கனவாக இருந்தது.


ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் அப்போது ஷாங்கனிற்கு ஆன்லைன் கள்ளச்சந்தையில் கிட்னி விற்கும் நபர்களின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது.


ஐ ஃபோன் வாங்க வேண்டும் என்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு தனது வலது கிட்னியைஇந்திய மதிப்பில் சுமார் 2 லட்ச ரூபாக்கு விற்றுள்ளார்.

தற்போது நோய் தொற்று காரணமாக மற்றொரு கிட்னி பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது தான் அவர் கிட்னி விற்ற விவகாரம் தெரிய வந்துள்ளது.

அவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இப்போது அந்த இளைஞர் தினமும் டயாலசிஸ் செய்தால் தான் உயிர்வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் வாங் ஷாங்கன்.