ஹட்டனில் வானில் தென்பட்ட மர்மப் பொருள்!!

701

Hatton

ஹட்டன் பகுதியில் நட்சத்திர வடிவிலான மர்மபொருளொன்று வானில் தென்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை 10 மணியளவில் இவ்வாறு தென்பட்டுள்ளது.

வானத்தில் காணப்பட்ட நிலவுக்கு அருகில் நட்டத்திரம் போன்ற மிகவும் பிரகாசமாக காணப்பட்ட குறித்த மர்ம பொருள் சுமார் 20 நிமிடம் வரை தென்பட்டதாகவும் பின்னர் நிலவுக்கு பின்புறமாகச் சென்று மறைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மர்ம பொருள் வானத்தில் தென்பட்டதனால் இப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டதாகவும் பெருமளவான மக்கள் அதனைப் பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.