வவுனியாவிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சூரன்போருக்கு சுகாதாரப் பிரிவினர் அனுமதி மறுப்பு!!

1688


சூரன் போர்



கொவிட்- 19 தாக்கம் காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடுவதினை தவிர்ப்பதற்காக வவுனியாவிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சூரன்போர் நிகழ்த்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



அசுரப் பிடியிலிருந்து விடுதலை பெற்று முத்தியின்பத்தை அடைதலே ஆன்மாக்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கு. அசுர குணங்களை அழித்து நன்னிலை அடைதலை குறியிட்டு நிற்கும் சடங்காக சூரன் போர் விளங்குகிறது.




இந்துக்களின் முதன்மையான விரதங்களில் ஒன்றாகிய கந்தசஷ்டி விரத்தின் இறுதிநாளில் சட்டித் திதி கூடி நிற்கும் மாலைப் பொழுதில் சூரன் போர் இடம்பெறுவது வழமை.


அந்தவகையில் இன்று (20.11) வெள்ளிக்கிழமை கந்தசஷ்டி விரத்தின் இறுதிநாளாகும். எனினும் சுகாதார நடைமுறை மற்றும் மக்கள் ஒன்று கூடுவதினை தவிர்க்கும் வகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரன் போர் நிகழ்த்துவதற்கு வவுனியா சுகாதார பிரிவினரினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டளவில் மக்களுடன் மாத்திரம் சூரன்போரை நிகழ்த்துவதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார பிரிவினரிடம் ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதற்கும் சுகாதார பிரிவினர் அனுமதி மறுத்துள்ளனர்.