வவுனியா – அனுராதபுரம் பொலிசாரிடம் போலி நாணயத்தாள்களோடு சி க்கிய மூவர்!!

451


போலி நாணயத்தாள்..


போலி நாணயத்தாள்களுடன் தொடர்புடைய ச ட்ட வி ரோத நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் மதவாச்சியில் கை து செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அனுராதபுரம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து நேற்று அவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து வெளிநாட்டு போ லி நாணயதாள்கள் 200, நாணயம் அச்சிடும் இயந்திரம், 100 டொலர் பெறுமதியான அமெரிக்க நாணயதாள்கள் மூன்று மற்றும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கை ப்பற்ற ப்பட்டன.


கை து செய்யப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர் எனத் தெரிவித்த பொலிஸார், அவரிடமிருந்து வெவ்வேறு பெயர்களில் தயாரிக்கப்பட்ட ஏழு மருத்துவர்களின் றப்பர் முத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஊசி மருந்துகள் என்பனவும் கை ப்பற்ற ப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்.


க ள் ள நோ ட்டுக்களை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் கொடுத்து அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு முயற்சித்த வேளையிலே மூவரும் கை து செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கை து செய்யப்பட்டவர்கள் கொட்டகலை, அனுராதபுரம் மற்றும் மொனராகலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.