வவுனியாவில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட த டையுத்தரவு மீளப்பெறப்பட்டது!!

684


உணவகங்களுக்கு..


நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தா க்கத்திலிருந்து நாம் பா துகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும்.அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்று நீக்கிகளைக் கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை அவசியமாக நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளாகும்.


இதற்கு மேலதிகமாக சுகாதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல்,


உடன் அமுலுக்கு வரும் வகையில் கடந்த 05.11.2020 முதல் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டிருந்ததுடன் உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறும் உ த்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் பா திப்படைந்திருந்ததுடன் பல உணவங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொடுப்பணவு வழங்க முடியாததனால் அவர் பணி இ டைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய வவுனியா வர்த்தக சங்கத்தினர் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் ஒரு மேசைக்கு இருவர் வீதம் அமர்ந்து உணவருந்துவதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார பிரிவினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வவுனியா வர்த்தக சங்கத்தின் கோரிக்கையினை பரீசிலனை மேற்கொண்ட சுகாதார பிரிவினர் உணவகங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட த டையுத்தரவினை இன்று (20.11.2020) மாலை 5.00 மணியுடன் மீளப்பெற்றுக்கொள்வதுடன்,

உணகவங்களுக்கு வருகை தருபவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்தல், முகக்கவசம் கட்டாயம், தேநீருக்கு பிளாஸ்டிக் கப், ஒரு மேசையில் எதிர் எதிரே இருவர் விகிதம் என பல சுகாதார கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

வவுனியா வர்த்தக சங்கத்தின் முன்னெடுத்த இம் முயற்சியினால் பலர் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.