நாடாளுமன்ற ஊழியர்களுடன் ஏரியில் விழுந்த பேருந்து!!

414


ஏரியில் விழுந்த பேருந்து..


நாடாளுமன்ற ஊழியர்களை அழைத்து சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தியவன்னா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக நாடாளுமன்ற ஊழியர்களை அழைத்து சென்ற பேருந்து இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஊழியர்களை அழைத்துக் கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது பேருந்தினுள் நாடாளுமன்ற ஊழியர்கள் 30 – 35 அதிகாரிகள் பயணித்துள்ளனர். அவர்களில் பலர் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சாரதி மற்றும் நடத்துநர் விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.