வவுனியா மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 502 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி!!

1302


502 மாணவர்கள்..


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 2964 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 502 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வடமாகாண புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா வடக்கு வலயத்தில் இருந்து 659 மாணவர்களும், வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 2305 மாணவர்களுமாக 2964 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.


அதில் வவுனியா வடக்கு வலயத்தில் 584 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன், 451 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும் பெற்றுள்ளனர். 91 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைக் கடந்து சித்தி பெற்றுள்ளார்கள்.


வவுனியா தெற்கு வலயத்தில் 2035 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன், 1625 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். 411 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைக் கடந்து சித்தி பெற்றுள்ளார்கள்.

இதன்படி வவுனியா மாவட்டத்தில் 502 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைக் கடந்து சித்தி பெற்றுள்ளதாக வடமாகாண புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.